வடலூர் வள்ளலார் கோயில் அருகே மருத்துவமனை கட்ட அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் கோவில் அருகே மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

வள்ளலார் பெருவெளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், வருகின்ற அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குப் பின்பு கட்டுமான பணிகளை தொடரலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதியோர் இல்லம், சித்தா மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கட்டுமானப் பணிகள் தொடங்க எதிர்ப்பு கூறுவதற்கான காரணங்களை அக்டோபர் 3ஆம் தேதிக்குள் தெரிவிக்கவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து, சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை அக்டோபர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ள 269 பேருக்கு நீதிமன்ற நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadalur vallalar temple place hospital permission High court High court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->