தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்த மேலும் ஒரு வழக்கு! மீண்டும் அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!
The Kerala Story movie issue SC case 2
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கேரளா மாநில இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த படம் இஸலாமியர்கள் மீது ஒரு பொய்யான கட்டமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
தணிக்கை குழுவும் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், திரைப்படத்தில் முக்கிய காட்சியான முன்னாள் கேரள முதல்வரின் பேட்டி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது. அதில், "இன்னும் 20 ஆண்டுகளில் கேரளாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை மிக்கவர்களாக மாறிவிடுவார்கள். அதற்கான பணி நடைபெறுகிறது, பணம் விநியோகிக்க படுகிறது, மதம் மாற்றம் செய்யப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த திரைப்படம் தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கற்பனையான கதை என்று படக்குழு அறிவிக்க உத்தரவிட கூறி, உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றம், கேரளா உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தி உள்ளது.
English Summary
The Kerala Story movie issue SC case 2