இன்று எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள்..தமிழக அரசு மரியாதை.! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்  மற்றும் நடிகருமான எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

 இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும், இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

 சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

1960ஆம் ஆண்டு இவர் 'பத்மஸ்ரீ விருதுக்காக" தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருது, அண்ணா விருது, வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.

இன்று தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் நிறுவனருமான எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn govt Honour to MGR birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->