பாடகி சுசித்ரா குற்றச்சாட்டு தொடர்பில் விஜய், நடிகை த்ரிஷா மீது காவல் துறை விசாரணை நடத்தாதது ஏன்..? வீரலட்சுமி கேள்வி..?
Why didnt the police investigate Vijay and actress Trisha in connection with the singer Suchithra allegations Veeralakshmi question
பாடகி சுசித்ரா குற்றசாட்டு தொடர்பில், நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்? என தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எலிப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.
இவாறு சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், காவல் துறையும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்? என்று பேசியதோடு, இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது..? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Why didnt the police investigate Vijay and actress Trisha in connection with the singer Suchithra allegations Veeralakshmi question