சுய உதவிக் குழு உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும் நெய்தல் அடையாளத்துடன் விற்பனை.. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உறுதி!
All the products produced by SHGs are sold with weaving marks Puducherry District Collector confirmed
சுய உதவிக் குழு சார்பில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நெய்தல் என்ற அடையாளத்துடன் (brand) விற்பனை செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்தெரிவித்தார்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அ, கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அரியாங்குப்பம் வட்டார அளவிலான கூட்டமைப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்ட சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தை பார்வையிட்டார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அலுவலர்கள், கூட்டமைப்பின் அலுவலர்கள் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் கலந்துரையாடினார்கள்.
அலுவலர்கள் அனைவரும் தங்களுடைய சுய அறிமுகத்தோடு தாங்கள் செய்து வரும் பணி பற்றி எடுத்துக் கூறினார்கள். அனைத்தையும் கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் இது போல் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் சுயஉதவி குழுக்கள் தயார் செய்த உணவு பண்டங்கள், எண்ணை வகைகள், ரெடி மிக்ஸ் உணவுப் பொருட்கள் அனைத்தையும் பார்வையிட்டார்கள். சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அவர்கள் தயாரித்த பொருட்களுக்கு சந்தைப்படுத்துவதில் சிரமம் இருப்பதாக ஆட்சியரிடம் தெரிவித்தார்கள். அதற்கு ஆட்சியரும் இதற்கான தக்க நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்கள். மேலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நெய்தல் என்ற அடையாளத்துடன் (brand) விற்பனை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
English Summary
All the products produced by SHGs are sold with weaving marks Puducherry District Collector confirmed