அவசரகால முதல் உதவி திறன் பயிற்சி..தானாக முன்வந்து காவலர்களுக்கு வழங்கிய பயிற்சி வழங்கிய மெட்வே மருத்துவமனை!
Emergency First Aid Skills Training Medway Hospital volunteers to train police personnel
ஈரோட்டில் காவலர்களுக்கான அவசரகால முதல் உதவி திறன் பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டு ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இருதயத்திற்கான இசிஜி, மனித உடலின் எலும்புகளுக்கான கால்சியம் சத்துகளுக்கான பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் ஈரோடு நசியனூர் மெட்வே மருத்துவமனை இணைந்து நடத்திய காவல்துறையினருக்கான அவசர கால முதல் உதவித் திறன் பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாம் ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் மற்றும் மெட்வே மருத்துவமனை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மோகன்குமார் ஆகியோர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சரவணன், ரமேஷ், ராமகிருஷ்ணன், செந்தில் பிரபு, கோமதி, ராஜ நளாயினி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம் மற்றும் பயிற்சியின் முக்கிய நோக்கம் சாலை விபத்து சமயங்களில் முதலுதவியாளராக செயல்படுதல், அடிப்படை உயிா்க்காக்கும் உதவித் திறன் பயிற்சி மற்றும் உடல்நல விழிப்புணர்வை முன்னிலைப்படுத்தி காவல்துறையினருக்கு மெட்வே மருத்துவமனையின் அவசர மருத்துவ நிபுணர்கள் டாக்டர்.அருண் தீபக் மற்றும் டாக்டர்.நடராஜ் ஆகியோர்கள் பயிற்சி வழங்கினர்.
இந்த மருத்துவ முகாம் மற்றும் பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டு ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இருதயத்திற்கான இசிஜி, மனித உடலின் எலும்புகளுக்கான கால்சியம் சத்துகளுக்கான பரிசோதனை செய்து பயனடைந்தனர். தாமாக முன்வந்து காவல்துறையினரின் பணிச்சுமையை அறிந்து மருத்துவ முகாம் மற்றும் பயிற்சி வழங்கிய மெட்வே மருத்துவமனை நிர்வாகத்திற்கு காவல்துறையினர் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
English Summary
Emergency First Aid Skills Training Medway Hospital volunteers to train police personnel