சூர்யாவின் 'வாடிவாசல்' - அப்டேட் கொடுத்த பிரபல இசையமைப்பாளர்!
Vadivasal movie Update
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு மையமாக கொண்டு நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை சில மாதங்களுக்கு முன்பு பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். கங்குவார் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களாக படபிடிப்பு தாமதமாகி வருகிறது. சமீபத்தில் நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இது முடிந்தவுடன் விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ''வாடிவாசல் திரைப்படத்திற்கான இசை தயார் நிலையில் உள்ளது.
தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் படபிடிப்பு பணிகள் முடிந்ததும் 'வாடிவாசல்' படபிடிப்பு ஆரம்பமாகும். உங்களைப் போல் நானும் மிகுந்த ஆர்வத்தில் தான் இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் திரைப்படத்திற்கான பின்னணி இசை, பாடலுக்கான இசை தயாராக உள்ள நிலையில் சூரியா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் ஆர்வத்துடனும் உள்ளனர்.