"பழைய விஷயங்கள் வெளிய வரணும்னா..... இளையராஜாவ தோண்டுங்க" - வைரமுத்து பகீர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக  பாடலாசிரியராக இருந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் கவிஞராகவும்  எழுத்தாளராகவும் தமிழ் பற்றாளராகவும் பல பரிணாமங்களை கொண்டவர்.

இவரைப் பற்றிய சில விரும்ப தகாத தகவல்கள் வந்தாலும் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தமிழ் ஆர்வலராகவும் தன்னை என்றுமே சமரசம் செய்து கொள்ளாதவர். இவர் கவிதை படிக்கும் போய் கேட்டால் தமிழ் பிடிக்காதவருக்கும் தமிழ் பிடித்து விடும். அவ்வளவு அழகாகவும் கவிதை  துவத்துடன் உணர்ச்சி பூர்வமாக படிக்கக் கூடியவர் வைரமுத்து.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் குரல்  என்ற திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டார். இந்தத் திரைப்படத்தில் அருள்நிதி பாரதிராஜா மற்றும் ஆத்மிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியின் போது பாரதிராஜா பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் வைரமுத்து.

அவர் குறித்து பேசிய வைரமுத்து பாரதிராஜாவின் திரைப்படங்களில் மண்வாசம் இருக்கும் என்று தெரிவித்தார். அவரது திரைப்படங்களில் தான் வீட்டில் இருக்கக்கூடிய  கருப்பொருள்கள் மற்றும் நம் தமிழ் கலாச்சாரம் சார்ந்த மரபுகளை அவரது படங்களில் அதிகமாக காணலாம் என தெரிவித்தார். இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் உள்ள கிராமங்கள் எல்லாம் அதிநவீன நகரங்கள் ஆகிவிடும். அப்போது வட்டாரச் சொற்கள்  கேட்க வேண்டும் என்றால் பாரதிராஜாவின் படத்தை பார்க்க வேண்டும். இன்று நம் தமிழ் கலாச்சாரத்தை அறிவதற்கு கீழடியை தோண்டுவது போல்  நம் பழைய வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள பாரதிராஜாவை தோண்ட வேண்டும்  வைரமுத்துவை தோண்ட வேண்டும் என் இசைஞானி இளையராஜாவை கூட தோண்ட வேண்டும் என்று கூறினார்  கவிஞர்  வைரமுத்து .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vairamuthu shocking interview if you dig me and Ilayaraja old things come out


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->