தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையின் தற்போதைய பரிதாப நிலை.!
valli thirumanam tamil actress marikannu
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டிப் பறந்த பிரபல நடிகை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார். வள்ளி திருமணம் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்தவர் மாரிக்கன்னு. இவர் மக்களை கவர்ந்ததோடு, குடியரசு தலைவர் கையால் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
மேலும், சினிமாவை தவிர்த்து நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தவர். இவர் வள்ளிதிருமணம், திருவிளையாடல் போன்ற பல கதைகளில் நடித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவருடைய நடிப்பை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரண்டு வந்ததாக கூறப்படுகிறது. இப்படி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை மாரிக்கன்னு, தற்போது ரோட்டில் அனாதையாக ஆதரவின்றி இருந்து வருகிறார்.
நடிகை மாரிக்கன்னு குறித்து ஊர் மக்கள் கூறியவை, இந்த அம்மாவை பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை. இவர்கள் இப்படித்தான் ரொம்ப நாட்களாக இருந்து வருகிறார். அவருக்கு எப்போது சாப்பிட தோன்றுகிறதோ அப்போது சாப்பிடுவார், தூங்குவார், கோவில்திண்ணைகளில் அமர்ந்து இருப்பார். மனநிலை சரியில்லை என்றாலும் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார். தற்போது இவர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
valli thirumanam tamil actress marikannu