என்னை வாழை வாழ வைக்கவில்லை....எழுத்தாளரின் உருக்கமான பதிவு!...சர்ச்சையில் வாழை கதை!
vazhai did not make me live The authors warm record vazhai story in controversy
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ திரைப்படம் வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன், இந்த படத்தை பார்த்துவிட்டு, தனது முகநூலில் பதிவிட்ட கருத்து பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில், ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.
வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய “வாழையடி" என்ற சிறுகதை. என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர் உள்ளிட்டோர் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு.
ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.
இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் . கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. “வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்” என்னை வாழை வாழ வைக்கவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
vazhai did not make me live The authors warm record vazhai story in controversy