வேலூர் தங்க கோவிலில் பிரபல நடிகை குடும்பத்துடன் சாமி தரிசனம்! ரசிகர்கள் ஆரவாரம்! - Seithipunal
Seithipunal


வேலூர், ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு பிரபல நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா குடும்பத்தினருடன் வந்து ஸ்ரீ நாராயணி அம்மையை தரிசனம் செய்தனர். 

மேலும் தங்கத்தினால் ஆன சுவர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தங்களது கை காலால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை காட்டி கோவிலை சுற்றி வளம் வந்தனர். 

இதனை தொடர்ந்து நடிகர் சினேகா, பிரசன்னா ஆகியோர் பொற்கோவில் மடாதிபதி சக்தி அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இவர்களுக்கு சக்தி அம்மா ஆசியா அளித்து பிரசாதம் வழங்கினார். 

நடிகை சினேகா குடும்பத்தினருக்கு வேலூர் தங்க கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நடிகை சினேகா குடும்பத்துடன் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றபோது, அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டது. 

சினேகா கோவிலுக்கு வந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அனைவரும் கோவில் முன்பு குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. 

தரிசனம் முடித்து வெளியே வந்த சினேகா, பிரசன்னாவை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Golden Temple famous actress family Sami Darshan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->