அரபிக் குத்து பாடலை கேட்டு சிவகார்த்திகேயனிடம் விஜய் என்ன சொன்னார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இதற்காக சிவகார்த்திகேயன் பல லட்சம் ரூபாய்சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த பாடலுக்காக விஜய் சிவகார்த்திகேயனை பாராட்டுயது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த பாடலை முதல் முறை விஜய் கேட்டபொழுது அவருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டதாம். உடனே அவர் சிவகார்த்திகேயனுக்கு கால் செய்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து நன்றியையும் தெரிவித்தாராம். இதனால் அனிருத் மற்றும் நெல்சன் இருவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay wishes To Sivakarthikeyan for Arabic Kuthu song


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->