நடிகர் விக்ரமை வைத்து பா.ரஞ்சித் எடுப்பது சாதி படமா? தங்கலான் எனும் பறையர் குடி! - Seithipunal
Seithipunal


தங்கலான் எனும் ஆதிக்கம் நிறைந்த பறையர் பிரிவு! 

மெட்ராஸ் மற்றும் அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் வாயிலாக பிரபலமான இயக்குனர் பா.ரஞ்சித். இவர் படத்தில் எப்பொழுதும் மறைமுகமாக சாதிய குறியீடுகள் இருப்பது வழக்கம்தான். தற்பொழுது சியான் விக்ரம் வைத்து தங்கலான் எனும் படத்தை இயக்குகிறார். இந்த படம் கே.ஜி.எப் படம் போல இருக்குமென்று ஏற்கனவே பா.ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இதுவும் கோலார் தங்க சுரங்கத்தில் வசிக்கும் மக்களின் கதை என்று ஒரு பேட்டியில் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். ஆனால் தங்கலான் என்பது பறையர் சமூகத்தில் உள்ள ஆதிக்கம் மிக்க உட்பிரிவாகும்.

1881ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கிலேயர்களின் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வேட்டுவ பறையர், திகிழு பறையர், மொகச பறையர், குடிமி பறையர், அத்வைத பறையர் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி பேசிய 84 பறையர் பட்டம் கொண்ட உட்பிரிவுகள் உள்ளது. இந்த உட்பிரிவில் 76 தமிழ் பேசும் பறையர்கள் பட்டம், 3 தெலுங்கு பேசும் பறையர்கள் பட்டம், 5 மலையாளம் பேசும் பறையர்கள் பட்டம் உள்ளது.

தமிழ் பேசும் பறையர்கள் பட்டத்தில் ஒன்றுதான் தங்கலான் பறையர்கள். பறையர் சாதியில் தங்கலான் பிரிவினர் ஆளுமை மிக்க உயர்ந்த பிரிவினர் ஆகும். இவர்கள் வேலைக்காரர்களாகவும், சாதி வழக்கு தீர்க்கும் பறையர்களின் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். தங்கலான் பட்டம் மறவர் சாதியிலும் ஒரு பிரிவினருக்கு உள்ளது.

கோலார் தங்க வயல் சார்ந்த கதைக்களம் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்து இருந்ததால் தங்கலான் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ரசிகர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் அது பறையர் சாதியின் உட்பிரிவின் பெயர் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

ஆதிக்க சாதியினரால் தலித் சமுதாய மக்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் உரிமைகள், சொத்துக்கள் அனைத்தும் ஆதிக்க சாதியினரால் பறிக்கப்பட்டுள்ளது என மேடைகளில் பேசும் பா.ரஞ்சித். தன்னுடைய படத்திற்கு பறையர் சாதியின் ஆதிக்கம் மிக்க பிரிவினரின் பட்டப் பெயரான தங்கலானை வைத்துள்ளார். 

சாதி ஒழிப்பை பற்றி மேடைக்கு மேடை பேசும் பா.ரஞ்சித் எப்பொழுது சாதிய படங்கள் எடுப்பதை கைவிடுவார். தமிழ் மக்களிடையே மறைந்து இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, பட்டப் பெருமையை பா.ரஞ்சித் மீண்டும் வெளிகொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளாரோ என சந்தேகம் எழுகிறது. ஒற்றுமையாக இருக்கும் பறையர் சமூகத்தினர் இடையே பிரிவினை உண்டாக்கி விடுவாரோ என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சாதிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து நல்ல படங்களை இந்த சமுதாயத்திற்கு தர வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram movie name Tangalaan was Paraiyar caste division


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->