என்ன நண்பா நண்பி ரெடியா..! நடிகர் விஜயின் ‘தி கோட்’ படத்தின் 4-வது சிங்கிள் நாளை வெளியீடு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கோட்’ படத்தின் 4-வது சிங்கிள் நாளை ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 68-வது படமாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செப். 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் சிங்கிளான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இதில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் மறு ஆக்கம் செய்யப்பட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா குரலில் ‘ஸ்பார்க்’ என்ற பாடலும் அண்மையில் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 4வது சிங்கிளை படக்குழு நாளை ஆகஸ்ட் 31 அன்று வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What friend, friend, ready Actor Vijay's 4th single from 'The Code' is out tomorrow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->