பாண்டியர்களின் யாத்திசை.. பொன்னியின் செல்வனுக்கு போட்டியா.? - இயக்குனர் பேட்டி.!
yaathisai will create a huge impact in indian cinema industry director promise
ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களுக்கு எதிராக போராடிய ஒரு தொல்குடியை பற்றிய வரலாற்றுப் படமான யாத்திசை வருகின்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி திரைகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. முற்றிலும் புது முகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது திரைத்துறையினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பாக ஜெ கே கணேசன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். குரு சோமசுந்தரம், சக்தி மித்திரன், சுபத்ரா, செம்மலர், அன்னம் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெளியான ஆறு நாட்களில் ஆறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
.
இந்நிலையில் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய இயக்குனர் தரணி ராஜேந்திரன் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் வரலாற்றை மக்களுக்கு சமர்ப்பிக்க இருக்கிறோம். அந்த காலத்திலுள்ள தமிழ் மக்களுக்கு புரிவதற்கு கஷ்டமாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் தயாரிப்பாளர் தான் சினிமா ஒரு கலை இனி நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று விடாப்பிடியாக இருந்தார். தயாரிப்பாளர் மற்றும் எனது குழுவின் முயற்சியில் தான் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது என்று கூறினார்.
மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்ட அவர் "இந்தத் திரைப்படம் நிச்சயமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியானது அல்ல. இது தமிழர்களின் தொல் குடிகளை பற்றிய ஒரு வரலாறு என தெரிவித்துள்ளார். மேலும் இத்திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
English Summary
yaathisai will create a huge impact in indian cinema industry director promise