மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலி..!
5400 professors vacancy in central government colleges
மத்திய அரசு மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
'
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பதிலளித்ததாவது:- "நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 ஜனவரி 31ம் தேதி கணக்குப்படி, 5,400 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதில் பாதிக்கும் மேற்பட்டவை ஓபிசி, எஸ்டி மற்றும் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டவை. அதாவது எஸ்சிக்கு 788, எஸ்டிக்கு 472, ஓபிசிக்கு 1,521. இந்த பல்கலைக்கழகங்களில் 7,825க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
பொதுவாக காலியிடங்கள் ஏற்படுவதும் அவற்றை நிரப்புவதும் தொடர்ச்சியான செயல்முறையாகும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஓய்வு, ராஜினாமா மற்றும் கூடுதல் தேவைகள் காரணமாக காலியிடங்கள் குறித்து கேள்வி எழுகின்றன. பதவிகளை நிரப்பும் பொறுப்பு மத்திய பல்கலைக்கழகத்திடம் உள்ளது என்றுத் தெரிவித்தார்.
English Summary
5400 professors vacancy in central government colleges