தொலைதூர படிப்பு விவகாரத்தில் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்! அண்ணாமலை பல்கலைக்கழகம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தொலைதூர படிப்பு விவகாரத்தில் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் இல்லாமலேயே தொலைநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெறாமல் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருவதாகவும், இதனால் உயர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சிக்கல் ஏற்படும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதன் மூலம் சுமூக முடிவு எடுக்கப்படும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai university statement on distance education


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->