பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை பார்வையிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

போலி என்.சி.சி. முகாம் நடந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 4 பள்ளிகளில், ஏற்கனவெ 2 பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள 2 பள்ளிகளுக்கும், ஒரு வாரத்திற்குள் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணமாக கிருஷ்ணகிரி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.1.6 கோடியை தமிழக அரசு செலுத்தியுள்ளது. நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட மாணவிகள் தரப்பில் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கை பொறுத்தவரை, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தி வரும் காரணத்தினால் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order to tamilnadu govt for duplicate ncc camp issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->