நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
Class 10 board exams to begin tomorrow
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு , தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்றுவந்தநிலையில் இன்றுடன் முடிவடைய உள்ளது.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல்15-ந்தேதி வரை நடைபெற உள்ளது . இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது.மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு , தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு மே 19-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Class 10 board exams to begin tomorrow