தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு - எப்போது தெரியுமா?
engineering course general category counselling start from today
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு - எப்போது தெரியுமா?
தமிழகத்தில் மொத்தம் 430 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அந்தக் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டில் (2023-24) ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் னைத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
அதில் முதலாவதாக மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது.
இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று ஆரம்பமாகி நடைபெற உள்ளது. இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .
English Summary
engineering course general category counselling start from today