உச்சநீதிமன்றத்தில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in supreme court
உச்ச நீதிமன்ற JCA ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, கணினி அறிவுத் தேர்வு, தட்டச்சு வேகத் தேர்வு, விளக்கத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் OBC பிரிவினர்களுக்குக் கட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். SC, ST, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிவினர்களுக்கு ரூபாய் 250/- செலுத்த வேண்டும்.
சம்பளம்: 35,400 முதல் 72,040 வரை வழங்கப்படும்.
கடைசி தேதி : விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in// என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தின் மூலம் மார்ச் 8ஆம் தேதி இரவு 11:55 மணிக்குள் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
English Summary
job vacancy in supreme court