தமிழக மருத்துவத்துறையில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in tamilnadu medical department
தமிழக அரசு மருத்துவத்துறையில் இருக்கும் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வயது வரம்பு:- 37 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
கல்வித்தகுதி:- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பல் மருத்துவ அறுவை சிகிச்சை பெற்றிருக்க வேண்டும். மெட்ராஸ் மெடிக்கல் பதிவுச் சட்டம், 1914 கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். 12 மாதத்திற்கு குறையாமல் பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை : ஆன்லைன் வழியாக எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழி எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் இரண்டு தாள்கள் கொண்டு நடத்தப்படும். இதில் தமிழ் மொழி தகுதி தாள் கட்டாயமாகும். தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:- இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:- தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்க மார்ச் 17-ம் தேதியே கடைசி நாள் ஆகும்.
English Summary
job vacancy in tamilnadu medical department