பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தேதி! இன்று மாலை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை காரணமாக 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது தேர்வுகள் நடத்தப்படாமலேயே இருந்தன. 

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஊரடங்கு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என தமிழக அரசு அவ்வப்போது தெரிவித்து வந்தது. கொரோனா தொற்று குறைந்து வரக்கூடிய சூழலில் கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு பள்ளிகளும் திறக்கப்பட்டன.

தற்போது மழலையர் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு உள்ளன. பொதுத் தேர்வு நடைபெற உள்ள வகுப்புகளுக்கு பாடங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல தமிழக அரசும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் போதுத் தேர்வு நடத்த செய்யப்பட்டுள்ளது.

பொது தேர்வு அட்டவனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு அட்டவனையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public exam time table for TN School students


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->