காலாண்டு விடுமுறை நீட்டிப்பு?.....அமைச்சரிடம் ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோள் என்ன? - Seithipunal
Seithipunal


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ராமு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பின்னர் 9 நாட்கள் விடுமுறை விடப்படும் என்றும், ஆனால், நடப்பாண்டில்  செப்டம்பர் 28-ம்  தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை என 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் போது, வெள்ளிகிழமை வருவதால் அன்று ஒரு நாள் மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே, அக்டோபர் 3, 4-ம் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும், ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும் அவகாசம் கிடைக்கும்.

இதன் காரணமாக பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Quarterly vacation extension What is the request of the teachers to the minister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->