அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது - முதல்வர் ஸ்டாலின் பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை கொளத்தூரில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம் காலனியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை திறந்து வைத்த முதலமைச்சர், கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர், மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்த முதலமைச்சர், பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறையின் இடத்தில் புதிதாக அமையும் வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. கொளத்தூர் என்பது எனது சொந்தத் தொகுதி, நினைத்த நேரத்தில் நான் இங்கு வருவேன். 

முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட தெளிவான விளக்கமே, வெள்ளை அறிக்கைதான். அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக வரும் தகவல்கள் குறித்து உங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு பதிலளித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், "மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Udhay DCM Post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->