கேரளா : வேலைநிறுத்தம் எதிரொலி., பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தக்கூடிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, கேரள மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் இரண்டு நாள் நாடு முழுவதும் தொழிற்ச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.

அதன்படி நேற்று கேரள மாநிலத்தில் நள்ளிரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை முதல் அரசு பேருந்துகள் எதுவும் ஓடவில்லை.

இதன்காரணமாக, திருவனந்தபுரம் எர்ணாகுளம் கோழிக்கோடு திருச்சூர் உள்ளிட்ட பல நகரங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

அதே சமயத்தில் ரயில் சேவை, விமான சேவை வழக்கம்போல் நடைபெற்றது. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாட்களில் நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

strike issue kerala school leave


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->