மாணவர்களை ஒழுங்குபடுத்த நல்லொழுக்க கல்வி பாடம்! ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களை ஒழுங்குபடுத்த, உளவியல் வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கும் வகையில் நல்லொழுக்கக் கல்வி பாடத்தை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிப்ரவரி 25 ஆம் தேதியன்று சென்னை புளியந்தோப்பு அம்மையம்மாள் தெருவிலுள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒழுங்கீனமாக முடி வளர்த்திருந்ததைக் கண்ட தலைமை ஆசிரியை, தலை முடியை ஒழுங்காகவும், சரியாகவும் வெட்டி வரச் சொன்னதற்காக ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுமின்றி மாணவனுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருக்கும்போதே தலைமையாசிரியையின் கன்னத்தில் மாணவன் அறைந்து, கன்னத்தைக் காயப்படுத்தியச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தைகள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டு சீரழிந்துபோவதற்கு  பெற்றோர்களே காரணமாக அமைந்துவிடுகிறார்கள். மாணவனை குற்றம் சொல்வது ஏற்புடையதல்ல. குழந்தைகளிடம் பெற்றோர்கள் நடந்துக்கொள்ளும் அணுகுமுறை, அடக்குமுறை மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனதில் எழும் கோபம் உள்ளுக்குள்ளே அடக்கிவைத்தன் விளைவு இதுபோன்ற செயலில் ஈடுபடத் தூண்டுகிறது. 

அன்பு அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் மனநிலையின் உச்சம்
வெள்ளித்திரையில் தோன்றும் ஹீரோயிசம் வெளியில் தன்னை ஒரு கதாநாயகன் போல காட்டிக்கொள்ள முயலுகிறார்கள்.

கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனம் உருவாகி குடும்பம் பொருளாதாரவளர்ச்சி பணத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கின்ற பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்காக தினம் ஒரு மணி நேரம் ஒதுக்கி அவர்களின் மனநிலையும் அறிந்துகொள்ளவேண்டும். பள்ளிக்கல்வித்துறையும் நன்னெறி பாடத்தினை ஒரு பாடமாக வைக்கவேண்டும்.

நெறிபிறழ் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால நலன் கருதி மாவட்டம்தோறும் சிறந்த உளவியல் வல்லுனர்களைக் கொண்டு அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற ஆவனச்செய்ய மாண்புமிகு முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teachers demanding good discipline classes for Schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->