தஞ்சாவூர் நியாய விலைக் கடைகளில் 200 காலி பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் நேரடி முறையில் 200 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. கூட்டுறவு சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளுக்கு காலியாக உள்ள 200 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் http://www.drbtnj.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே நவம்பர் 14ஆம் தேதி 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி, வயதுவரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பம் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆள் சேர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு drbpdstnjrecruit@gmail.comஎன்ற மின் அஞ்சல் வாயிலாகவும், உதவி மைய தொலைபேசி எண் 04362 245442 வாயிலாகவும் தஞ்சாவூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur District ration shop 200 sale man vacancies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->