குரூப்-4 தேர்வு ஜூலை 24-ந்தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பின் முழு விவரம்.!
TNPSC Group 4 exam Date 2022
குரூப்-4 தேர்வு ஜூலை 24-ந்தேதி நடைபெறும் என்று, டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
" 7,301 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப்-4 தேர்வு, வரும் ஜூலை மாதம், 24-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுகளின் முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
வரும் நவம்பர் மாதம் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்" என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்வு காலை ஒன்பது முப்பது மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்றும், 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், இந்த தேர்வுக்காக மார்ச் 30ஆம் தேதி முதல் (நாளை முதல்) ஏப்ரல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல் : மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில், 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் தரவரிசை பட்டியலில் அவர்கள் இடம் பெறுவார்கள், 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
English Summary
TNPSC Group 4 exam Date 2022