தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூவை எப்படி பயன்படுத்தலாம்..!
aavaran poo for skin whiteness
ஆவாரம் பூவை உலர்த்திச் சருகாக்கி அதைத் தூள் செய்து, அத்துடன் அரைப் பங்கு கடலை மாவை கலந்து, காற்றுப்புகாமல் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் காலையில் இந்தப் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் குழைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்தால் சில நாட்களில் சிவப்பாக மாறலாம்.
தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி 4 வேளை முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். இதனால் முகம் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறும்.
ஆவாரம் பூவுடன், ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.
![aavaram poo, seithipunal](https://img.seithipunal.com/media/aavaran in-59eqj.jpg)
உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ கஷாயம் தவறாமல் குடித்து வர சூடு தணிந்து குளுமை அடையும்.
சிலருக்கு உடல் சூட்டினால் கண் சிவந்து விடும். அவர்கள் ஆவாரம் பூவை உலர்த்திப் பொடித்து நீர் விட்டு அரைத்துக் குழப்பி படுக்கும் முன் கண் புருவத்தின் மீது பற்றுப் போட கண் சிவப்பு மாறும்.
ஆவாரம் பூவுடன், வெள்ளரி விதையும், கசகசாவும் சேர்த்து பால் விட்டு விழுதாக அரைத்து முகம், கழுத்து, கை, கால்களுக்கு பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் தொட்டு, விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்து விட்டுக் கழுவவும். முகம், கைகளில் பனிக்காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக உண்டாகும் மங்கு, தேமல் போன்றவற்றை போக்குகிறது.
நெற்றியில் வரி, சுருக்கங்கள், தலைக்கு டை அடிப்பதால் ஏற்படும் கருமை திட்டுக்கள் இவையெல்லாம் அழகைக் கெடுத்துவிடும். ஆவாரம் பூவை அரைத்து கருமை படர்ந்த இடத்தில் குளிப்பதற்கு முன்பு தடவி வர, ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம்.
English Summary
aavaran poo for skin whiteness