சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்; அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து..!
New Zealand defeated Pakistan and won
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்கியது. கராச்சி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் வில் யங் 107 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.

அத்துடன், டாம் லாதம் 118 ரன்கள் எடுத்துசத்தம் விளாசினார். கிளென் பிலிப்ஸ் 61 ரன்கள் எடுத்து அரைச்சதம் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக நசீம் ஷா மற்றும் ஹரீஸ் ராப் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து 321 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் சார்பில் சாவூத் சகில் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சகில் 06 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஸ்வான் 03 ரன்னும், பக்தர் சமான் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக பாபர் அசாமுடன், சல்மான் அஹா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் சேர்த்த சல்மான் அஹா 42 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தாஹிர் 01 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தநிலையில்,64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து, குஷ்டில் ஷாவுடன், ஷாகீன் அப்ரிதி ஆகியோர் ஜோடி அதிரடியாக ரன்கள் சேர்த்த நினைத்த நிலையில்,குஷ்டில் ஷா தனது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் அப்ரிதி 14 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து குஷ்டில் ஷாவும் 69 ரன்களில் வெளியேறினார். அடுத்த்ததாக களமிறங்கிய ஹாரிஸ் ரவுப் 19 ரன்களும், நசீம் ஷா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக வில்லியம் ஓ ரூர்கே மற்றும் மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் தலா 03 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 02 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
English Summary
New Zealand defeated Pakistan and won