நம் ஊரில் கிடைல்கும் இந்த பூ.. ரத்த செயல்பாட்டை மேம்படுத்தும்.. மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு.!
amazing health benefits of butterfly pea flower
சங்கு புஷ்பம் என அழைக்கப்படும் சங்குப்பூ நமது ஊர்களில் காடு தோட்டங்கள் மற்றும் வேலைகளில் இயற்கையாக வளரக்கூடிய ஒரு செடி வகையாகும். இது ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்களை பூக்கும் ஒரு வகை செடி. இதன் இலை வேர் மற்றும் பூ ஆகியவை ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கி இருக்கின்றன.
வெள்ளை நிற பூக்களை கொண்ட சங்குப்பூ செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் கசாயத்தை உட்கொள்ள தலையில் ஏற்படும் புழு கடி. காய்ச்சல் வீதி ஆகியவை குணமாகும்.
ஊதா நிற பூக்களை கொண்ட சங்குப்பூ செடியில் உள்ள வேர்களை கசாயம் ஆக்கி உட்கொள்ள கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய் மூட்டு வலி தலைபாரம் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக அமையும்.
சங்குப்பூ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் கர்ப்பப்பை பிரச்சனை வெள்ளைப்படுதல் சிறுநீர் தொற்று மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
படபடப்பு ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும் இதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை குணமாக்குவதற்கும் இந்த சங்கு பூவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சங்கு பூவின் சாரு மாவுச்சத்துக்களை எளிதில் செரிமானமாக உதவுகிறது.
இந்த சங்கு பூவில் இருக்கக்கூடிய அமிலங்கள் உடலில் இன்சுலின் சுரப்பை சீராக வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றன. இந்த பூக்களில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மனச்சோர்வு மற்றும் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
English Summary
amazing health benefits of butterfly pea flower