குடலை சுத்தப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.. வாழைக்காயை எப்படியெல்லாம் சாப்பிடலாம்.!
Banana medical benefits
வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான காய்களில் ஒன்றாகும். வாழைக்காயானது வாழை மரத்திலிருந்து பெறப்படுகிறது. வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
வாழைக்காயை உணவில் சேர்த்து உட்கொள்வதால் குடலை சுத்தப்படுத்தி உடலை குறைக்க உதவுகிறது.
அதேபோல் வாழைக்காய்க்கு பசியை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு. வாழைக்காயை வதக்கி மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டால் இருமல் இரைச்சல் வாயில் நீர் ஊறுதல் கழிச்சல் போன்ற பல நோய்கள் குணமாகும்.
நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மருத்துவ உணவாக வாழைக்காய் வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேல் தோலை சுத்தம் செய்து துவையலாக செய்து சாப்பிடுவதால் உடலில் ரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. அதேபோல் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வாழைக்காயில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அதேபோல் வாழைக்காயில் உள்ள வைட்டமின், மெக்னீசியம், கால்சியம் ஆகியவை அனைத்தும் எலும்புகளுக்கும் வலிமை தந்து மூட்டு வலி, ஆஸ்டியோ போரோசிஸ் ஆகிய நோய்களை நம்மை அண்டாமல் தடுக்கிறது.