வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிக்கலாமா? - அதனால் என்ன நன்மை?
benefits of inji juice
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இஞ்சி உள்ளது. இது வாசனையைத் தருவதுடன் பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக உள்ளது. அதன் படி இந்த இஞ்சி சாறை வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை இங்குக் காண்போம்.
* இஞ்சி சாறை குடிப்பதால், மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலி உள்ளிட்டவை சரியாகும். கர்ப்ப காலத்தில் காலை சுகவீனத்தைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியை சரிசெய்யும்.
* இஞ்சி சாறு உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்கிறது. HSBC நிலைகளை மேம்படுத்துகிறது.

* கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க இந்த இஞ்சி சாறு பெரிதும் உதவுகிறது.
* இஞ்சி சாற்றின் மிகப்பெரிய நன்மை என்றால், செரிமான பிரச்சனையை தீர்க்கும். இந்த இஞ்சி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது மிகவும் நல்லது.
* உயர் இரத்த அழுத்தம், பல்வலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு உதவுகிறது. வாய் துர்நாற்றத்தை குறைக்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஒரு முறை இஞ்சி சாறு அருந்த வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.