எலும்புகளை வலுப்படுத்த அசைவ உணவுகளுக்கு மாற்றான சைவ உணவுகள்.! - Seithipunal
Seithipunal


எலும்புகளை வலுப்படுத்த அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். ஆனால், அசைவ உணவுகளை சாப்பிடாமலேயே இந்த ஏழு சைவ உணவுகளை எடுத்துக்கொண்டு எலும்புகளை வலுப்படுத்த முடியும். அது என்னென்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 

கேழ்வரகில் அதிக கால்சியம் இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் எலும்புகள் பலமடையும். வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் சிறந்த உணவாகும். கேழ்வரகை சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். கேழ்வரகில் விட்டமின் டி இருக்கிறது. எனவே இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.  

கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக இருப்பது கீரைகள் தான். இளம்பை வலுப்படுத்த கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் அதிக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து, விட்டமின் ஏ உள்ளிட்டவை இருக்கின்றன.

பாலாடை கட்டியில் அதிகப்படியான கால்சியம் இருக்கிறது. எலும்புகள் வலுவிழக்கும் போது அந்த பிரச்சனைகளை சரி செய்ய பாலாடை கட்டி உதவுகிறது. எலும்பு பலவீனமடைந்ததாக உணர்ந்தால் அதன் ஆற்றலை அதிகரிக்க உணவில் அதிக புரோட்டின் கொண்ட பாலாடைக்கட்டியை பயன்படுத்தலாம். இதை குழந்தைகளுக்கும் கொடுப்பது நல்லது.

விட்டமின்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு உணவு தான் டோஃபு. ஊட்டச்சத்து குறைபாடு இது நீக்கி ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது. இதில் நிறைய ப்ரோட்டீன் இருப்பதால் இது எலும்பை வலுவடைய செய்கிறது.  

பொதுவாக பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலும் கால்சியம் மற்றும் விட்டமின் டி இருக்கிறது. மேலும், இதில் புரதச்சத்தும் இருப்பதால் இது எலும்புக்கு நல்லது.

பலவீனம் அடைந்த எலும்புகளை வலுப்படுத்த பாதாம் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள், கால்சியம் இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. 

சோயா பீன்ஸில் நிறைய கால்சியம் மற்றும் புரோட்டின் இருக்கிறது. எனவே, இதை அடிக்கடி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது எலும்புகளை நன்றாக வலுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Best vegetarian foods for health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->