கள்ளக்காதலில் சிக்கிய கண்டக்டர் - தனக்குத் தானே சூனியம் வைத்த கொடூரம்.!!
conductor arrested for living relation ship case in karnataga
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி தனியார் பேருந்தில் சென்று வந்தார். அப்போது அந்த பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்த வீரபத்ரசாமி என்பவருக்கும், இந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண், தனது கள்ளக்காதலன் வீரபத்ரசாமியை தன்னுடைய வீட்டுக்கே அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீரபத்ரசாமி தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். இதற்கிடையே அந்த பெண்ணின் வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்தபோது அங்கு வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக சந்தேகப்பட்டு வீரபத்ரசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இதையடுத்து வீரபத்ரசாமியிடம் இருந்து அந்த பெண் விலக தொடங்கி, தனது செல்போன் எண்ணையும் மாற்றினார். இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் புதிய செல்போன் எண்ணிற்கு தொடர்புக் கொண்ட வீரபத்ரசாமி தன்னுடனான கள்ளத்தொடர்பை கைவிடக்கூடாது என்றும், இல்லையேல் நாம் இருவரும் இருக்கும் ஆபாச வீடியோவை உனது கணவர், குடும்பத்தினர், கிராம மக்கள் என அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டினார்.
இதனால் பயந்துபோன அந்த பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையறிந்த வீரபத்ரசாமி, அந்த பெண்ணின் ஆபாச வீடியோவை அவரது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அனுப்பியதையடுத்து போலீசார் வீரபத்ரசாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
conductor arrested for living relation ship case in karnataga