18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்! மத்திய அரசு ஆலோசனை.!
Booster dose for all
18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முதல் தவனை தடுப்பூசி, இரண்டாம் தவனை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி மற்றும் நான்காம் தவனை தடுப்பூசி வரை செலுத்தி வருகின்றன.
இந்தியாவில் இரண்டாம் தவனை தடுப்பூசியை தொடர்ந்து முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.