மட்டன் உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? இதில் நன்மைகள் கிடையாதா?!
consuming mutton increase cholesterol there any benefit
தமிழகத்தில் அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் போன்றவற்றை விரும்பி உண்ணுகிறார்கள். இதில், மட்டனை (வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு என இரண்டு வகையான ஆட்டிறைச்சி) அதிகமாக உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஆகுமா? யார் யார் எல்லாம் இதனை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்:
சிக்கனை விட மட்டன் விலை அதிகமாகக் காணப்பட்டாலும் அதில் நன்மைகள் பல இருக்கிறது என மக்கள் அதை விரும்பி சாப்பிடுகிறார்.
பிராய்லர் கோழி இறைச்சியை விட ஆட்டு இறைச்சியில் வைட்டமின் 12, இரும்புச்சத்து, மெக்னீசியம், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் ஆட்டிறைச்சி சிலருக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடும் என்பதை மறந்து விடக்கூடாது. ஆரோக்கியம் நிறைந்த உணவாக இருந்தாலும் அதனை அளவாகத் தான் உட்கொள்ள வேண்டும்.
அதையும் மீறி அதிகமாக உட்கொள்வதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக மட்டனை உட்கொண்டால் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், சிறுநீரகத் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் ஆட்டு இறைச்சியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதேபோன்று இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருப்பவர்கள் ஆட்டு இறைச்சி தவிர்க்க வேண்டும்.

இதில் அதிகப் புரதச்சத்து காணப்படுகிறது. இதைக் குழந்தைகள் உட்கொள்வதனால் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம்.
மூலநோய், பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், சளி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் ஆட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும். இந்த ஆட்டு இறைச்சியை எண்ணெயில் பொரிக்காமல், சூப் வைத்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். இதயப் பிரச்சினைகள் இருப்பவர்கள் செம்மறி ஆட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
English Summary
consuming mutton increase cholesterol there any benefit