சூழ்நிலைக்கேற்ப கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்! மத்திய அரசு அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள மார்ச் மாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில், ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சமூக நிகழ்ச்சிகள், விளையாட்டு, பொழுபோக்கு, மத வழிபாடு, விழாக்கள், கல்வி, கலாசாரம், கூட்டம் கூடுவது, வணிக வளாகங்களுக்கான கட்டுப்பாடு, பொது போக்குவரத்து, உள்ளிட்டவற்றிற்கான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேர ஊரடங்கு, திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அழகு நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கான கட்டுப்பாடுகள், அலுவலகங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து சூழ்நிலைக்கேற்ப மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் முடிவெடுக்கலாம் எனவுன் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது உள்ளிட்ட கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை தொடர்வது, மருத்துவமனைகளை உருவாக்குவது மற்றும் தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid restrictions relaxation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->