கிரில் சிக்கன் மூலம் புற்றுநோய் வர வாய்ப்பா? உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்! - Seithipunal
Seithipunal


உலக மக்களின் எளிய அசைவ உணவு தேர்வு என்றால், அது சிக்கன் தான். சிக்கலில் பல்வேறு விதமான சமையல் வெரைட்டிகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 

குறிப்பாக இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சிக்கன் பிரியாணிக்கு அடிமையானவர்கள் அதிகம் என்று சொல்லலாம். இந்த நிலையில் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றான வருக்கப்பட்ட கிரில் சிக்கன் மூலம் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாவது, அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது மற்றும் நேரடியாக தீயில் சமைக்கும்போது, இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் HCAகள் மற்றும் PAHக்கள் உருவாகத் தொடங்கும்.

இந்த ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் அல்லது HAs மற்றும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் அல்லது PAHs ஆகியவை  உயிரணுக்களின் டிஎன்ஏவில் மாற்றங்களுக்கு வழிவகுத்து அவற்றை புற்றுநோயாக மாற்றும்.

எனவே, தொடர்ச்சியாக இதுபோன்ற இறைச்சிகளை சாப்பிடும் போது பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எப்போதாவது சாப்பிட்டால் பிரச்னை இல்லை என்றும் உறுதியாக சொல்ல முடியாது. 

வேண்டுமானால், இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊற வைத்தால், இந்த புற்றுநோயயை ஏற்படுத்தும் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை 90 சதவிகிதம் குறைக்கலாம். மேலும், குறைந்த வெப்பநிலையில் நீண்ட நேரம் சமைப்பதால் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grilled meat Grilled Chicken Cancer 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->