உடல் எடை குறைக்கும் கொத்தவரங்காய்.! இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


நம் நாட்டில் பல்வேறு விதமான காய்கறிகள் விளைகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே நாம் உணவுக்காக பயன்படுத்தி வருகிறோம். நாம் அதிகம் பயன்படுத்தாத காய்கறிகளிலும் சிலவற்றில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதேபோன்ற ஒரு காய்கறி தான் கொத்தவரங்காய்.

கொத்தவரங்காய் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் கலோரி அளவு குறைவு மேலும் இது உடலுக்கு தேவையான அனைத்து விட்டமின்கள் மற்றும் புரதங்கள் போன்றவற்றையும்  கொடுக்கின்ற ஒரு காய்கறி ஆகும்.

கொத்தவரங்காயை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால் நம் இரத்த ஓட்டம் சீராகிறது. இதன் மூலம் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் சிராான் அளவில் கிடைக்க உதவுகிறது. மேலும் இது இரத்த சோகை போன்றவற்றிலிருந்தும் நம் உடலை பாதுகாக்க உதவுகிறது.

கொத்தவரங்காயில் இருக்கக்கூடிய அதிகமான நார்ச்சத்து நம் உடலின் செரிமான தன்மையை மேம்படுத்துவதோடு அஜீரண கோளாறுகள் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்தின் காரணமாக  வளர்ச்சிதை மாற்றம் சீராகி உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வைக்கிறது.

கொத்தவரங்காயில் வைட்டமின் சி உள்ளது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய தாது உப்புக்கள், ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது பல மடங்கு அதிகரிக்கிறது. நோய்கள் மற்றும் கிருமிகளில் தொற்றுகளிலிருந்து நம் உடலை காப்பாற்றிக் கொள்ள  கொத்தவரங்காய் அதிகளவில் எடுப்பது நன்மை பயக்கும்.

கொத்தவரங்காய் ஒரு சிறந்த உணவாக மட்டும் பயன்படாமல்  சருமத்தை பாதுகாக்கும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது  இவற்றில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் வேதிப்பொருட்கள்  சருமங்களில் இருந்து திசுக்கள் செய்தமடைவதை தடுக்கின்றன  மேலும் சருமத்தில் இருக்கும்  கரும்புள்ளிகள்  நீங்கவும் இவை  உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits of cluster beans which initiates weight loss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->