வரைபடத்தில் சிதைந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் - காங்கிரஸை வெளுத்து வாங்கிய பாஜக.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் இன்று, நாளை என்று இரண்டு நாட்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தையொட்டி சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனரில் இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பா.ஜ.க. அமித் மால்வியா "பெலகாவி நிகழ்வில் காங்கிரஸ் தனது அனைத்து விளம்பரப் பலகைகளிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா உள்ளிட்டோரின் படங்களுடன் இந்தியாவின் சிதைந்த வரைபடத்தையும் வைத்துள்ளது. அந்த வரைபடத்தில் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.

இது ஒரு தவறாக இருக்க முடியாது. இது ஒரு அறிக்கை. இது அவர்களின் திருப்திப்படுத்தும் அரசியலின் ஒரு பகுதி. இந்திய முஸ்லிம்கள் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு விசுவாசமானவர்கள் என்று நம்புகிறது. காங்கிரஸ் என்பது புதிய முஸ்லிம் லீக். அது மீண்டும் இந்தியாவை உடைக்க விரும்புகிறது.

கர்நாடக மாநில பாஜக, காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சித்தரிப்பது இந்திய இறையாண்மையை அவமதிப்பதாகும். இவை அனைத்தும் அவர்களுடைய வாக்கு வங்கிகளை திருப்தி படுத்துவதற்கானது. இது அவமானம்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp distorted congrass banner india map


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->