நீரழிவு , சிறுநீரக பிரச்சனைக்கு இதோ முள்ளங்கி! இவ்வளவு நன்மைகளா?
Health benefits of radish
முள்ளங்கி உடலுக்கு நன்மை தரக்கூடிய பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களையும், தாது உப்புகளையும் கொண்டிருக்கிறது. இது குளிர் காலங்களில் அதிகமாக கிடைக்கக்கூடிய ஒரு காய்கறி வகையாகும்.முள்ளங்கியில் இருக்கக்கூடிய ஏராளமான நன்மைகளில் சிலவற்றைக் காண்போம்.
குளிர்காலங்களில் முள்ளங்கியை தினமும் சாப்பிட்டு வர நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்தும் நம் உடலை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
முள்ளங்கி சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து முள்ளங்கி சாப்பிட்டு வரும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.
முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதோடு அவற்றின் ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
முள்ளங்கி வயிற்றுப்புண் மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்து வரும்போது நம் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றம் அதிகமாக உதவுகிறது .
பற்களில் மஞ்சள் நிறம் இருந்தால் முள்ளங்கி சாறுடன் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் நீங்கிவிடும். மேலும் முள்ளங்கி சாறு உடல் சோர்வை நீக்கி உடல் புத்துணர்ச்சியுடனிருக்க உதவுகிறது.
English Summary
Health benefits of radish