உயிர்போகும் பல்வலியை உடனே சரிசெய்ய இதோ எளிமையான டிப்ஸ்.!
Home Remedies For Teeths pain
பற்களை சரியாக பராமரிக்காமல் இருப்பதால் பல் வலி, பற்சொத்தை போன்றவை உருவாகும். இதனை தவிர்க சில வழிகளை பின்பற்றலாம். வீட்டு வைத்தியம் மூலம் இதனை தவிர்க்கலாம்.
உப்பு நீர்: தொண்டை புண், இருமல் அல்லது பல்வலிக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின் அதை பற்களில் படும்படி வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து துப்புங்கள். இதனால் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும்.
பூண்டு: ஒரு கிராம்பு மற்றும் பூண்டு இரண்டையும் நசுக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். வலி போகும் வரை அப்படியே இருக்கட்டும். இதனாலும் சரியாக வில்லை எனில் மருத்துவரை அணுகலாம்.
குளிர்ச்சியான ஒத்தடம் : ஒரு துண்டை எடுத்து, அதில் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து கட்டுங்கள். அதை பல் வலிக்கும் தாடையில் அழுத்தவும். இது வலியைக் குறைக்க உதவும் அல்லது குறைந்தபட்சம், அதன் தீவிரத்தைக் குறைக்கும்.
கிராம்பு எண்ணெய்: பஞ்சை உருண்டையாக்கி சிறிது கிராம்பு எண்ணெயில் முக்கி, பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவும். வலியின் தீவிரம் குறையும் வரை அப்படியே வைக்கவும். கிராம்பு எண்ணெய் பல் வலியின் தீவிரத்தை குறைக்கும்.
வாய் ஆரோக்கியத்தை பராமறிப்பதன் மூலம் பற்சிதைவு போன்றவற்றில் இருந்து பாதுகாக்கலாம். அதற்கான மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையும் பெற்று கொள்ளலாம்.
English Summary
Home Remedies For Teeths pain