சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேண்டுமா.? இதோ எளிய வழிமுறைகள்.!
How to control diabetes
சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதன்படி இன்சுலின் செடியை வீட்டிலேயே வளர்த்து அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து இரண்டாம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதை தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.
இந்த இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் நல்ல பலன் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த இலை கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது
சர்க்கரை நோயாளிகள் இன்சுலினை மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை ஊசி மட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படும் சாரு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தையும் படிப்படியாக குறைக்கிறது.
மேலும் மா இலைகளும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொழுப்பையும் கட்டுப்படுத்த உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
அதேபோல் கொய்யா இலைகளில் உள்ள ஆல்பா குளுக்கோஸிடேஸை தடுக்கிறது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது. அதன்படி கொய்யா இலைகளை காலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.