உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கம்பு கூழ்.!
how to make kambu koozh
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், இப்போதிலிருந்தே வெயில் வாட்டிவதைக்க ஆரம்பமாகிவிட்டது. அதனால், பொதுமக்கள், தங்களது உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பு கூழ் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
உடைத்த கம்பு
தண்ணீர்
மோர்
உப்பு
செய்முறை:-
முதலில் கம்பை குக்கரில் சேர்த்து, தண்ணீருடன் மிதமான தீயில் 4 விசில் விடவேண்டும். பின்னர் அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறி ஆறவிட வேண்டும். ஆறியவுடன், உருண்டைகளாக உருட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இதை ஒரு மணி நேரம் ஊறவிட்டு கட்டியில்லாமல் கரைத்து மோர், தண்ணீர், உப்பு சேர்த்து நல்ல கூழ் பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஊறுகாய், மிளகாய் வைத்தால், மாங்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.