குரங்கு அம்மை நோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது.! இதைமட்டும் செய்து விடாதீர்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதுவரை 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது. 

செய்யக் கூடியவை:

குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவரை மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும்.

கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினியால் போட்டுகொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

செய்யக் கூடாதவை:

குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்ந்து துவைத்தல் கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to protect ourselves from monkey measles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->