நுரையீரலை பொசுக்கும் ''கொசுவர்த்தி'' பயன்படுத்துவதால்... இவ்வளவு தீமைகளா?
Mosquito bites lungs damage
* நுரையீரல் மனித உடலில் முக்கிய உறுப்பாகும். பாக்டீரியா, கிருமி தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுவதால் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று மூச்சு குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது.நுரையீரலில் மென்மையான தசைகள் உள்ளது. நுரையீரலில் பல நுண்ணிய இரத்த குழாய்கள் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை நுரையீரல் தமனி வெளியேற்றி புதிய வாயுவை ஏற்றுக் கொண்டு சிறைகள் மூலம் இதயத்திற்கு செல்கிறது.
* இந்த நுண்ணிய பைகளில் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது. இத்தகைய நுரையீரல் கொசுவர்த்தி புகை சுவாசிப்பதால் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறது .இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
* நுரையீரல் தோற்று ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக புகை பிடிப்பதால் அதிகம் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கொசுவர்த்தியில் இருந்து வரும் புகை மூலமாக நுரையீரல் பாதிக்கப்படுகிறது. கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு நமது வீட்டில் கதவை அடைத்து விடுகிறோம்.
* அதனால் அந்த புகை இரவு முழுவதும் அறையில் சுற்றி திரிவதால் நாம் அதனை சுவாசிக்கிறோம். கொசுவர்த்தி புகையினால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொசுவர்த்தி புகை கிட்டத்தட்ட புகை பிடிப்பதற்கு சமம் புகைப்படம் ஏற்படுகிறது.
* நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கும். வாய், உதடு, தொண்டை, குரல்வளை, உணவு குழாய், சிறுநீர்ப்பை, கல்லீரல் வயிறு என உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு மாரடைப்பு பக்கவாதம், ரத்த குழாய்களில் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை கொசுவர்த்தி புகை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
* கொசுவர்த்தி புகையின் காரணமாக சுவை அரும்புகள் ஆற்றலை இழந்து உணவின் மீதான விருப்பம் குறைய தொடங்கிவிடும். புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகளையும் கொசுவர்த்தி புகை அதிகம் கொண்டுள்ளதால் சிறிது நேரம் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு கதவைத் திறந்து வைத்துவிட்டு பின்னர் அதனை அணைத்து விடுவது நல்லது. புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அதனை சுவாசிப்பவர்களுக்கும் அதன் நச்சுத்தன்மை நுரையீரலுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.
English Summary
Mosquito bites lungs damage