'இந்த' பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால்... நீங்கள் 'இஞ்சி டீ' குடிக்கவே கூடாது..!! - Seithipunal
Seithipunal



சளி, இருமலுக்கு நிவாரணமளிக்கும் இஞ்சி டீயை எல்லோருமே குடிப்பது உகந்ததல்ல. சில உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் இஞ்சி டீ குடித்தால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். எனவே யாரெல்லாம் இஞ்சி டீ குடிக்க கூடாது என்று தெரிந்து கொள்வோம். 

1. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் இஞ்சி டீ குடிக்கவே கூடாது. இதனால் சர்க்கரை அளவு குறைந்து, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 

2.  உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீ குடித்தால், ரத்த அழுத்தம் குறைந்து, இதய படபடப்பை ஏற்படுத்தும். இதனாலேயே குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இஞ்சி டீ குடிக்க கூடாது.

3. பித்தப்பையில் கல் இருந்தால் இஞ்சி டீ குடிக்க கூடாது. ஏனெனில் பித்த நீர் அதிகளவில் சுரக்க ஆரம்பித்துவிடும். 

4. இஞ்சி உணவை சீக்கிரம் செரிக்கும் தன்மை கொண்டது. எனவே உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

5. கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக இஞ்சி டீ குடிக்கவே கூடாது. இது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும். 

6. அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் இஞ்சி டீ குடித்தால், மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

7. ஏதேனும் பிரச்சினைகளுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் இஞ்சி டீ குடிப்பதால் மருந்துடன் வினைபுரிந்து மிக மிக மோசமான விளைவுகளை இஞ்சி டீ ஏற்படுத்தி விடும். 

இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லாதவரும் இஞ்சி டீயை அதிகளவில் குடிக்க கூடாது. ஏனெனில் அது இரைப்பை பிரச்சினை, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, எரிச்சல், வாய்ப்புண், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Peoples Having These Problems Should Not Drink Ginger Tea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->