போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்.! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மத்திய அரசால் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

நாட்டில் போலியோவை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக, வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ரத்து செய்யப்படுகிறது.

அதற்கு பதிலாக பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று, பொது சுகாதாரத் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் உறுதிப்படுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

polio drop date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->